வடக்கு உட்பட 13 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை
Sri Lanka
Sri Lankan Peoples
Department of Meteorology
By Sumithiran
13 மாவட்டங்களுக்கு கடும் எச்சரிக்கை
திங்கட்கிழமை இரவு 11.00 மணி வரை நடைமுறைக்கு வரும் வகையில் 13 மாவட்டங்களுக்கு கடுமையான மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இதனால், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை, மாத்தளை, புத்தளம், மொனராகலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பல இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை
இந்த பிரதேசங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி