பல பகுதிகளில் மழைக்கு சாத்தியம் - வளிமண்டலவியல் திணைக்களம் தகவல்
weather
sri lanka
alert
By Vanan
இலங்கையின் பல பகுதிகளில் இன்று (02) மழையுடனான வானிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன், மேல், ஊவா, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்