திருகோணமலை பகுதியில் பாரிய மரம் முறிந்து வீழ்ந்தது போக்குவரத்து ஸ்தம்பிதம்
புதிய இணைப்பு
தற்போது நிலவி வரும் சீரற்ற காலை நிலை காரணமாக இன்று தம்பலகாமம் சந்தியின் திருகோணமலை கண்டி பிரதான வீதியில் பாரிய மரம் ஒன்று (27) மாலை முறிந்து விழுந்ததையடுத்து போக்குவரத்து ஒரு சில மணிநேரம் ஸதம்பிதமடைந்து காணப்பட்டது.
இதனை அடுத்து தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி வழிகாட்டுதளுக்கிணங்க வீதி அபிவிருத்தி அதிகார சபை, தம்பலகாமம் பொலிஸார், இராணுவத்தினர்கள் இணைந்து குறித்த மரத்தை அப்புறப்படுத்தியிருந்தனர்
முதலாம் இணைப்பு
தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக திருகோணமலை (Trincomalee) தம்பலகாமம் (Thambalagamuwa) பகுதியிலுள்ள வீதியின் ஒரு பகுதி உடைந்துள்ளதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
தம்பலகாமம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட தாயிப் நகர் கோயிலடி வைத்தியசாலை வீதியின் ஒரு பகுதியே இவ்வாறு உடைந்து விழுந்துள்ளது.
எனவே இவ் வீதி ஊடாக பயணிப்பதை தவிர்த்து மாற்று வழி ஊடாக பொது மக்களை பயணிக்குமாறு தம்பலகாமம் பிரதேச செயலகம் பொது மக்களை கேட்டுள்ளது.
மக்களின் இயல்பு நிலை
கன மழை காரணமாக தம்பலகாமம் பகுதியில் உள்ள பல தாழ் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் மக்களின் இயல்பு நிலையும் பாதிக்கப்பட்டுள்ளது.
முள்ளியடி பகுதியில் விவசாய நிலங்கள் உட்பட மக்களின் குடியிருப்பு பகுதிகளிலும் நீர் புகுந்துள்ளதால் பல அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
நீரில் மூழ்கியுள்ள பகுதிகளில் மேலதிக நீரை வெளியேற்ற பிரதேச செயலகம் ஊடாக மும்முரமாக பெகோ இயந்திரம் ஊடாக நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ஊடாக பல்வேறு நடவடிக்கைகளும் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |





