யாழில் மாணவர்கள் மத்தியில் தீவிரமாக பரவும் புதிய நோய்!
Jaffna
By pavan
யாழ்ப்பாணத்தில் நிலவி வரும் கடும் காற்றுடனான காலநிலை காரணமாக கண் நோய் பரவி வருவது அவதானிக்கப்பட்டுள்து.
குறிப்பாக வடமராட்சி, வலிகாமம் பிரதேச மாணவர்கள் மத்தியில் இந்த கண் நோய் பரவி வருவது அவதானிக்ப்பட்டுள்ளது.
கண் கடுமையாக சிவப்படைந்து, கண்ணில் பீழை தள்ளி, கண்ணில் நீர் சொரிவதுடன், கண்ணில் சிறியளவிலான வலியும் நோய் அறிகுறிகளாக உள்ளன.
பாடசாலை மாணவர்கள்
குறிப்பாக பாடசாலை மாணவர்கள் மத்தியில் வேகமாக பரவி வரும் இந்த தொற்று நோய் தொடர்பில் அவதானமாக இருப்பதுடன் மேற்கண்ட அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடுமாறு பொது சுகாதார பிரிவினர் அறிவித்துள்ளார்கள்.
குறித்த கண்நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் சுத்தமான கைக்குட்டையினை பயன்படுத்துமாறும், வெயில், தூசிகளுக்குள் செல்வதனை தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி