வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் உருவாகும் தாழ் அமுக்கம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
தென் அந்தமான் கடல் பிராந்தியத்தில் வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தின் தென்கிழக்குப் பகுதியுடன் இணைந்ததாக தாழ் அமுக்கப் பிரதேசம் ஒன்று உருவாகியுள்ளது.
இது மேற்கு - வடமேற்குத் திசையை நோக்கி நகர்வதுடன் நாளையளவில் மேலும் தீவிரமடைந்து தாழ் அமுக்கமாக வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு கடல்பிராந்தியத்திற்கு மேலாக காணப்படும்.
இதனால் இலங்கையின் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல இடங்களில் ஒரளவு மழை பெய்யக்கூடும் எனவும், நாட்டின் ஏனைய மாகாணங்களில், இன்று (28) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர், சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் திணைக்களம் அறிவித்துள்ளது.
இது தொடர்பான மேலதிக செய்திகளை இன்றைய காலை நேர செய்தித் தொகுப்பில் காண்க.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |