காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் - தொடரும் மழை - இன்றைய வானிலை அறிவிப்பு
நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் தற்போது காணப்படும் மழை மற்றும் காற்றின் நிலை மேலும் அதிகரிக்கப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும்.
சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
வடமேற்கு மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழை

ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் மாலை அல்லது இரவில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும் புத்தளம், அம்பாந்தோட்டை, திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது 45-50 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழையுடன், தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 8 மணி நேரம் முன்