வங்காள விரிகுடாவில் மேலடுக்கு சுழற்சி..! விடுக்கப்பட்ட அபாய எச்சரிக்கை

Sri Lanka Climate Change Weather
By Vanan Aug 30, 2022 04:28 PM GMT
Report

வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் அவ்வப்போது கிடைத்து வரும் மழை செப்டம்பர் 5ஆம் திகதி வரை தொடர வாய்ப்புள்ளதாக யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை குறித்து மேலும் தகவல் வெளியிட்டுள்ள அவர், வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சியானது மிகப் பரந்த பரப்பில் செல்வாக்கு செலுத்துவதன் காரணமாக மழை கிடைக்கும் போது செறிவான மழை கிடைக்கும் என்பதுடன் இடிமின்னலுக்கும் வாய்ப்புண்டு.

இந்த வளிமண்டல சுழற்சி அடுத்த சில தினங்களில் வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளையும் உள்ளடக்கி அரபிக்கடல் நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் அவ்வப்போது பரவலாக மிதமானது முதல் கனமானது வரை மழை நீடிக்க வாய்ப்புள்ளது எனக் கூறியுள்ளார்.

வங்காள விரிகுடாவில் மேலடுக்கு சுழற்சி..! விடுக்கப்பட்ட அபாய எச்சரிக்கை | Weather Today Weather Forecast

இதேவேளை, நாட்டின் சில பகுதிகளுக்கு இன்று இரவு முதல் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அத்தனகலு, களு, களனி, ஜிங், நில்வலா மற்றும் மகாவலி ஆறுகளில் தாழ் நிலப்பகுதிகளில் வெள்ள நிலைமை ஏற்படக் கூடும் என குறித்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்து அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களமும் தெரிவித்துள்ளது.

தெற்கு, சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேற்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026