மேலும் பல தடைகளை அறிவித்தது அரசாங்கம்!
By Vanan
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (17) ஆம் திகதி நள்ளிரவு முதல், வீடுகளிலும், மண்டபங்களிலும், திருமண நிகழ்வுகளை நடத்த அனுமதி வழங்கப்படமாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.
இது குறித்த தகவலை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
அத்துடன், இன்று(15) நள்ளிரவு முதல் எந்தச் சந்தர்ப்பத்திலும் பொதுமக்களுக்கு ஒன்றுகூட அனுமதி வழங்கப்படமாட்டாது எனவும்,
சிற்றுண்டிச்சாலைகளில், ஒரு சந்தர்ப்பத்தில் அதன் கொள்ளளவில், 50 சதவீதமானோரை விடவும் அதிகமானோருக்கு ஒன்றுகூட முடியாது எனவும் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி