கட்டுநாயக்காவில் தரையிறங்கிய விமானத்திற்கு மகத்தான வரவேற்பு (படங்கள்)
2023 இல் உலகில் குளிர்காலம் ஆரம்பமாகவுள்ள நிலையில், செக் குடியரசில் இருந்து 252 சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு விசேட விமானம் (சார்ட்டர் ஃப்ளைட்) 10/25 அன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
இதற்காக Polish Lot Airline (L.O.T.) விமானம் ஈடுபடுத்தப்பட்டு 10/25 அன்று காலை 06.55 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
விமான பயணிகளுக்கும்
அங்கு விமானம் நீர் வணக்கத்துடன் வரவேற்கப்பட்டதுடன், இந்த விமானத்தில் பயணித்த பயணிகள் இலங்கை சுற்றுலா மேம்பாட்டு பணியகம், ஏர்போர்ட்ஸ் மற்றும் ஏர்லைன்ஸ் லிமிடெட் மற்றும் இலங்கை பயண முகவர் நிறுவனங்களால் பாரம்பரிய நடனங்களால் வரவேற்கப்பட்டதுடன் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.

குளிர்காலம் முடியும் வரை
இந்த சிறப்பு விமானங்கள் நாட்டின் குளிர்காலம் முடியும் வரை அதாவது 2024 மார்ச் 26 வரை செக் குடியரசில் இருந்து சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையும்.


