ஹரக் கட்டாவை கொல்ல கமராவில் துப்பாக்கியை நுட்பமாக பொருத்திய வெல்டர் கைது
கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நதுன் சிந்தக விக்ரமரத்ன அல்லது ஹரக் கட்டாவை நீதிமன்ற வளாகத்தின் முன் வைத்து கொல்ல கமராவில் துப்பாக்கியை நுட்பமாக பொருத்திய வெல்டர் கைது செய்யப்பட்டதாக மேற்கு மாகாண வடக்கு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தக் குற்றத்தைச் செய்ய பத்திரிகையாளராகக் காட்டிக் கொள்ளமுயன்ற ஓட்டுநரை நேற்று முன்தினம் (1) காவல்துறையினர் கைது செய்தனர்.
பக்கோ சமந்தாவிடம் நடத்தப்பட்ட நீண்ட விசாரணை
சமீபத்தில் இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் கைது செய்யப்பட்டு தற்போது தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரிக்கப்பட்டு வரும் சந்தேக நபரான நெடும் கோடகே நிர்மலா பிரசங்கா அல்லது பக்கோ சமந்தாவின் நீண்ட விசாரணையின் போது வெளிப்படுத்தப்பட்ட உண்மைகளின் அடிப்படையில் இந்தக் கைதுகள் செய்யப்பட்டன.
வீட்டில் வைத்து கைது
பத்திரிகையாளராக மாறுவேடமிட்டு நீதிமன்ற வளாகத்தின் முன் ஹரக் கட்டாவைக் கொல்லத் திட்டமிடப்பட்டதாகவும், கம்பஹாவின் உடுகம்போல, டோம்பாவைச் சேர்ந்த ஒருவர் கமராவில் துப்பாக்கியை நுட்பமாக பொருத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதன்படி, 47 வயதான வெல்டர் அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
