வெலிக்கடை சிறைக் கலவர விவகாரம் : மரண தண்டனை விதித்தது கொழும்பு மேல் நீதிமன்றம்
Colombo
High Court
Welikada
Death Penalty
prison riots
By MKkamshan
வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்தின் போது 8 கைதிகள் துப்பாக்கிச்சூட்டில் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படுகொலை சம்பவம் தொடர்பில், முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு விசேட மேல்நீதிமன்றத்தினால் இந்த வழக்கு மீதான தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டது.
நீதியரசர்களான கிஹான் குலதுங்க, (தலைவர்) மஞ்சுள திலகரத்ன மற்றும் பிரதீப் ஹெட்டியாராச்சி ஆகியோர் அடங்கிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் இந்த தீர்ப்பை உறுதி செய்தது.
இதேவேளை, காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் முன்னாள் பரிசோதகர் நியோமல் ரங்கஜீவ விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்த அமைதியின்மையின் போது, 27 கைதிகள் உயிரிழந்திருந்தனர்.


புத்திர சோகத்தில் ஈழ அன்னையர்கள்... இன்று அன்னையர் தினம்… 14 மணி நேரம் முன்

உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்