லசந்த விக்ரமசேகர கொலை : வெளியான சந்தேகநபரின் புகைப்படம்

Sri Lanka Police Sri Lankan Peoples Law and Order Lasantha Wickramasekara
By Sathangani Oct 26, 2025 07:59 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகரவின் (Lasantha Wickramasekara) சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்படும் சந்தேகநபரைக் கைது செய்வதற்கு காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.

கடந்த 22ஆம் திகதி வெலிகம பிரதேச சபை தலைவரை இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் சுட்டுக் கொன்ற சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளைக் கைது செய்வதற்காக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் (குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவு) மற்றும் தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் ஆகியோரின் நேரடிக் கண்காணிப்பின் கீழ், பல காவல்துறை குழுக்கள் இணைந்து துரித விசாரணைகளை ஆரம்பித்தன.

வெலிகம பிரதேச சபைத் தலைவர் கொலை: பெண் உட்பட மூவர் அதிரடி கைது!

வெலிகம பிரதேச சபைத் தலைவர் கொலை: பெண் உட்பட மூவர் அதிரடி கைது!

வீட்டைச் சோதனையிட்டனர்

அதன்படி, நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவின் திட்டமிட்ட நடவடிக்கையின் பின்னர், அநுராதபுரம் - கெகிராவ காவல்துறை பிரிவின் 50 வீட்டுத்தொகுதியில், இக் குற்றத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மறைந்திருப்பதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அந்தப் பிரிவின் அதிகாரிகள், காவல்துறை விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினரின் உதவியுடன், இன்று (26) அதிகாலையில், கைவிடப்பட்டிருந்த ஒரு வீட்டைச் சோதனையிட்ட போது, பெண் ஒருவர் உட்பட இருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

லசந்த விக்ரமசேகர கொலை : வெளியான சந்தேகநபரின் புகைப்படம் | Weligama Ps Chairman Murder Police Search Suspect

சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டபோது, அவர்களுடன் இருந்த மேலும் சில நபர்கள் காவல்துறையினருடன் முரண்பட்ட நிலையில் அதில் காயமடைந்த காவல்துறை அதிகாரி ஒருவர் சிகிச்சைகளுக்கான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு சந்தேகநபர்கள் குற்றத்திற்குப் பயன்படுத்திய ஒரு மோட்டார் சைக்கிள்,12 இலட்சத்துக்கும் அதிகமான பணம், ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் பாவனைக்காக பயன்படுத்தப்படும் உபகரணங்கள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை, சந்தேகநபர்களுக்கு அடைக்கலம் கொடுத்த அப்பகுதியைச் சேர்ந்த மேலும் ஒரு சந்தேகநபரையும் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

நாகப்பட்டினம் - காங்கேசன்துறை கப்பல் சேவை : வெளியான முக்கிய அறிவிப்பு

நாகப்பட்டினம் - காங்கேசன்துறை கப்பல் சேவை : வெளியான முக்கிய அறிவிப்பு

சந்தேகநபரின் புகைப்படங்கள் 

அத்துடன், காவல்துறை அதிகாரிகளுடன் சண்டையிட்டு தப்பிச் சென்ற, அங்குலுகம பகுதியைச் சேர்ந்த ஹக்மன பரநலியனகே நுவன் தாரக என்பவரைக் கைது செய்ய காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.

இந்த சந்தேகநபர் சுமார் 5 அடி 6 அங்குலம் உயரமானவர் மற்றும் வலது கையின் மேல் பகுதியில் ஆங்கிலத்தில் “ANURADA” என்றும், இடது கையில் “හිතුමතේ ජීවිතේ” (சுயாதீன வாழ்க்கை) என்றும் பச்சை குத்தியுள்ளார்.

லசந்த விக்ரமசேகர கொலை : வெளியான சந்தேகநபரின் புகைப்படம் | Weligama Ps Chairman Murder Police Search Suspect

இந்த சந்தேகநபரின் புகைப்படங்கள் உங்களுடன் பகிரப்படுகின்றதாகவும் இவர் தொடர்பான தகவல்கள் தெரிந்தால், பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு காவல்துறையினர் கோரியுள்ளனர்.

அதன்படி, காவல்துறை மா அதிபருக்கு தெரிவிக்க (WhatsApp) - 071 859 8888 என்ற எண்ணையும் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு தெரிவிக்க  011 233 7162 / 071 859 2087 ஆகிய எண்களையும் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இதேவேளை நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவு, குற்றப் புலனாய்வுப் திணைக்களம், தென் மாகாணப் பிரிவுக் குற்றப் புலனாய்வுப் பணியகம், மாத்தறை மற்றும் அநுராதபுரம் பிரிவுக் குற்றப் புலனாய்வுப் பணியகம், காவல்துறை விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவ அதிகாரிகள் இணைந்து சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வடக்கில் இன்று பகல் முழுவதும் மின்தடை

வடக்கில் இன்று பகல் முழுவதும் மின்தடை

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

அரியாலை, London, United Kingdom

12 Feb, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்

கண்டி, கொடிகாமம், Montreal, Canada

08 Mar, 2026
நன்றி நவிலல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

11 Mar, 2020
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

பூவரசங்குளம், குருமன்காடு

10 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, கொழும்பு, சுன்னாகம்

10 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, London, United Kingdom

11 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025