வெசாக் தினத்தில் வடக்கு சிறைச்சாலைகளிலிருந்து விடுதலையான கைதிகள்!
வெசாக் தினத்தையொட்டி நாடளாவிய ரீதியாக 988 சிறைகைதிகள் சிறிலங்கா அதிபரின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்திருந்தது.
அதற்கமைய வெசாக் தினமான இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்து 14 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
வெசாக் தினத்தினை முன்னிட்டு, சிறிலங்கா அதிபரால் வழங்கப்பட்ட பொது மன்னிப்பின் அடிப்படையிலேயே அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
யாழில் கைதிகள் விடுதலை
சிறு குற்றங்கள், தண்ட பணம் செலுத்த முடியாததால் சிறைத்தண்டனை அனுபவித்தவர்கள் உள்ளிட்டவர்களே விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, வெசாக் தினத்தினை முன்னிட்டு வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து 15 கைதிகள் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் அதிகாரிகள் முன்னிலையிலேயே இன்று விடுவிக்கப்பட்டனர்.








