பரிட்சை வினாத்தாள் வெளியாகியதால் சர்ச்சை
மேல்மாகாண பாடசாலைகளுக்கு நடத்தப்படவிருந்த பரிட்சை வினாத்தாள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேல்மாகாண கல்வி திணைக்களத்தினால் நடத்தப்படும் பாடசாலை தவணைப் பரீட்சையின் வினாத்தாள்கள் பரீட்சைக்கு முன்னதாக வெளியாகியுள்ளதாக கொழும்பில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் அதிபர் தெரிவித்தார்.
மேலும் இதன் காரணத்தினால் கொழும்பில் உள்ள பல பாடசாலைகள் பரீட்சையை இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இடைநிறுத்தம்
மேலும், “மேல்மாகாணத்தில் சகல பாடசாலைகளிலும் தரம் 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான பரீட்சை இன்று (18) ஐந்தாம் நாளாக நடைபெறவிருந்தது.
எனினும் வினாத்தாள்கள் மற்றும் விடைத்தாள்கள் இரண்டும் பிள்ளைகளிடம் இருக்கும் போது பரீட்சை நடத்துவதால் எந்த பயனும் இல்லை இதன் காரணமாக கொழும்பில் உள்ள பல பாடசாலைகள் பரீட்சையை இடைநிறுத்த தீர்மானித்துள்ளன.
இந்த நிலையில் பரீட்சை நடத்துவதற்கும் விடைத்தாள்களை சரிபார்ப்பதற்கும் ஆசிரியர்கள் நேரத்தையும் உழைப்பையும் செலவழித்தும்
பலனில்லை. அத்தோடு மேல்மாகாணக் கல்வித் திணைக்களம் இது தொடர்பில் உடனடியாக ஆராய வேண்டும்” எனவும் தெரிவித்திருந்தார்.