ரஷ்யாவுக்கு பேரதிர்ச்சி: உக்ரைனில் களமிறங்கப்போகும் நட்பு நாடுகள்
உக்ரைனில் மேற்கத்திய நாடுகளின் படைகள் களமிறங்கும் தேவை அதிகரித்துள்ளதாக பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.
ஜேர்மன் மற்றும் போலந்து நாட்டு தலைவர்களுடன் கலந்துரையாடிய பின்னரே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, கடந்த மாதம் உக்ரைனில் மேற்கத்திய நாடுகளின் படைகள் களமிறங்க வேண்டும் என்பதை மேக்ரான் தெரிவித்ததையடுத்து ஜேர்மனி மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் கடுமையாக விமர்சித்திருந்தனர்.
நட்பு நாடுகள்
எனினும், அதிபர் மேக்ரான் தான் கூறிய விடயத்தில் உறுதியாக இருந்துள்ளதுடன் இது தொடர்பில் மேற்கத்திய நட்பு நாடுகள் முன்முயற்சி எடுக்காது என்றும் வலியுறுத்தியுள்ளார்.
அதேவேளை, மேற்கத்திய நாடுகள் உக்ரைனில் களமிறங்வதை தான் விரும்பாவிட்டாலும் ஒரு கட்டத்தில் வேறு வழியின்றி உக்ரைனில் தாம் களமிறங்க வேண்டியிருக்குமென தெரிவித்துள்ளார்.
ரஷ்யா-உக்ரைன் போர்
அத்துடன், மேற்கத்திய நாடுகள் உக்ரைனில் களமிறங்குவது, உறுதியாக ரஷ்ய இராணுவத்திற்கு எதிராகவே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், போலந்து, ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து ஒருபோதும் ரஷ்யாவால் உக்ரைனில் வெற்றிகொள்ள முடியாதபடி நடவடிக்கை எடுப்போம் என்றும் இறுதி வரையில் உக்ரைன் மக்களுக்கு துணையிருப்போம் என்றும் மேக்ரான் உறுதியளித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |