தென்னிலங்கையில் சிக்கிய திமிங்கல வாந்தி - பல கோடிகள் பெறுமதி..!
Sri Lanka
Sri Lankan Peoples
By Kiruththikan
ஐந்து கோடிக்கும் அதிக பெறுமதி கொண்ட திமிங்கில அம்பர் எனப்படும் திமிங்கல வாந்தியை வைத்திருந்த நபரொருவர் கொழும்பின் புறநகர் பகுதியான, நியதகல - பன்னிபிட்டிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரை நேற்றைய தினம் (20.04.2023) காவல்துறை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
விசேட சோதனை நடவடிக்கையின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது சந்தேகநபரிடம் இருந்து 14.3 கிலோகிராம் எடையுடைய அம்பர் மீட்கப்பட்டுள்ளது.
விலையுயர்ந்த வாசனை திரவியம்
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மீகொட பிரதேசத்தில் வசிக்கும் 31 வயதுடையவர் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
திமிங்கல வாந்தியானது உலகின் மிக விலையுயர்ந்த வாசனை திரவியத்தை தயாரிக்க பயன்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்