உலகிலேயே அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் உணவுகள் எவை தெரியுமா!
பணத்தை பற்றி கவலைப்படாமல் சிறப்பான உணவுக்காக எவ்வளவு வேண்டுமென்றாலும் செலவழிக்கத் தயார் என்பவர்களுக்காக உலகிலேயே அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் 6 உணவுகள் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
ஒயிட் ட்ரஃப்பிள்ஸ் (White truffles)
இத்தாலியின் சில பகுதிகளில் அரிய வகை உணவான ஒயிட் ட்ரஃப்பிள் என்ற காளான் வகையொன்று அதிகமான விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த ஒயிட் ட்ரஃப்பிள் என்பது ஒரு பூஞ்சைக்காளான் வகையாகும். உலகிலேயே இதுதான் முதலாவது இடத்தில் உள்ள விலை உயர்ந்த பூஞ்சை காளான் வகையாகும்.
இது இத்தாலியில் எந்த இடத்திலும் சுமார் 3000 டொலர்களுக்கு மேலாக விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
கோபி லுவாக் காபி (Kopi luwak coffee)
கோபி லுவாக் காபிக்கு, சிவெட் காபி(civet coffee) என்று மற்றொரு பெயரும் உள்ளது. இந்த காபியைத் தயாரிக்கும் முறை முற்றிலும் தனித்துவமானது என்பதால் உலகிலேயே விலை உயர்ந்த காபியாக விற்பனை செய்யப்படுகிறது.
சிவெட் டைஜெஷ்சன் முறையில் இந்த கோபி லுவாக் காபி தயாரிக்கப்படுகிறது. இந்த காபி விலை ஒரு கோப்பை ரூ.8000 வரை விற்கப்படுகிறதாக கூறப்படுகிறது.
குங்குமப்பூ (Saffron)
குங்குமப்பூவை சிவப்புத் தங்கம் என்றும் செல்லமாக அழைக்கின்றனர். உலகிலேயே மிக விலை உயர்ந்த மசாலாப் பொருள் இது. பல கோடிக்கணக்காண பச்சை குங்குமப்பூவை உலரவைத்துப் பதப்படுத்தினால்தான் நூறு கிராம் குங்குமப்பூ கிடைக்கும்.
ஒரு கிராம் விலை ரூ.800 முதல் ரூ.2000 வரை விற்கப்படுகிறது.
யுபாரி கிங் மெலான்ஸ் (Yubari king melons)
உலகிலேயே இவ்வளவு பெறுமதியான பழத்தைப் பார்க்க முடியாது. யுபாரி கிங் மெலான்ஸ் அதன் இனிப்புச்சுவைக்கும், அமைப்புக்கும் தன்னிகரற்றது.
ஜப்பானில் மட்டுமே இந்தப் பழம் விளைகிறது. எப்போதுமே இந்தப் பழத்தின் விலை உயர்வாகவே காணப்படும். கேள்வியும் குறையாது.
மாட்சுடேக் மஷ்ரூம்கள் (Matsutake mushrooms)
ஜப்பானிய சமையலை மிகவும் உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்லும் இந்த பூஞ்சைக் காளான் உலகளவில் மிக அதிக விலைக்கு விற்கப்படுகிறது.
காரணம் இதன் மணம், பார்த்தாலே சுண்டியிழுக்கும், விலை ஒரு பவுண்டு 1000 டாலர்கள் வரை இருக்கும். இந்திய ரூபாயில் அரை கிலோ ரூ.82,000 ஆகும்.
அல்மாஸ் கேவியர் (Almas caviar)
இந்த உணவுப்பொருளான அல்மாஸ் கேவியர் ஈரானில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பெலுகா ஸ்டர்ஜென்ஸ் (Beluga sturgeons) என்ற வகை மீன்களில் இருந்து கிடைக்கிறது.
உண்மையில் இந்த பெலுகா ஸ்டர்ஜென்ஸ் மீன்களின் முட்டைகள்தான் அல்மாஸ் கேவியர். ஈரானில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும்போதே இந்த கேவியர்கள் 24 கேரட் தங்கத்திலான டின்களில் நேர்த்தியாக அடைத்து வைக்கப்பட்டிருக்கும்.
உலகளவில் பலவகையான கேவியர்கள் கிடைக்கிறது என்றாலும் இந்த அல்மாஸ் கேவியர் தான் அவற்றுள் விலை உயர்ந்தாக காணப்படுகிறது, அதன் விலை ஒரு கிலோ ரூ.29 லட்சம் ஆகும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |