உள்ளூராட்சி சபை தேர்தலின் முக்கியத்துவம் என்ன..!
ஒரு அரசாங்கம் ஆட்சிப்பொறுப்பேற்று செவ்வனே தனது ஆட்சியை நடத்திச் சென்றால் அதன்மூலம் மக்கள் பயன் பெறும்போது அடுத்துவரும் தேர்தலும் அந்த அரசுக்கு சாதகமாகவே அமையும்.
எங்களுடைய நாட்டில் உள்ள குறைபாடு என்னவென்றால் அதிகார கட்டமைப்பில் இருக்க கூடியவர்கள் தங்களது அதிகாரம் தொடர்பாக தெளிவை பெற்றிராதபோது தங்களால் இறுதி தீர்மானம் எடுக்க முடியும் போது அதை விடுத்து வேறெருவரிடத்தில் பாரப்புடுத்தும்போது இவ்வாறான பிரச்சினைள் மேலெழும்பும்.
கடந்தகாலத்தில் வினைத்திறனற்ற சேவைகளே தமிழர் தரப்பில் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் உள்ளன. அப்படியென்றால் தற்போதைய உள்ளூராட்சி மன்ற தேர்தலில் அந்த அதிகாரம் தொடர்பில் தெளிவாக தெரிநிது கொண்டவர்கள் அந்த அதிகாரத்தை செலுத்துகின்ற பதவி நிலைகளுக்கு வரவேண்டும்.
வடக்கு கிழக்கில் அதிகாரத்தை செயற்படுத்துவ்து தொடர்பாகவும் அதன் கட்டுப்பாடுகள் தொடர்பாகவும் போதிய தெளிவில்லாத தன்மையே காணப்படுகிறது.
குறிப்பாக மாநகர சபை தேர்தலில் போட்டியிடும் ஒருவருக்கு அதன் அதிகாரம் தாடர்பான தெளிவு இருந்தால்தான் அந்த அதிகாரத்தை உச்சமாக பயன்படுத்தி அந்த பிரதேச மக்களுக்கான சேவைகளை ஆற்றக் கூடியதாக இருக்கும்.
இவ்வாறு தெரிவித்தார் யாழ்ப்பாண பல்“கலைக்கழக சட்டத்துறை தலைவர் கோசலை மதன்.
ஐபிசி தமிழுக்கு அவர் அளித்த பிரத்தியேக நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். நடைபெறப்போகும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் ,தமிழர் தரப்பின் ஆளுமையான வேட்பாளர்கள், அதிகாரம் தொடர்பான நிலைப்பாடு தொடர்பிலி அவர் அளித்த பல்வேறு விடயங்கள் காணொளியில்...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்… 2 நாட்கள் முன்

நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
6 நாட்கள் முன்