சம்பந்தன் விலகினால் நடக்கப்போவது என்ன? வெளியானது அறிவிப்பு
sampanthan
tamil national alliance
telo
karunakaram
By Sumithiran
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் பதவியிலிருந்து இரா.சம்பந்தன் விலகினால் புதிதாக இணைத்தலைமைத்துவம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை குறிப்பிட்ட அவர், குறித்த நிலைப்பாட்டிலேயே தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சியான டெலோ எனப்படும் தமிழீழ விடுதலை இயக்கம் உள்ளதாக குறிப்பிட்டார்.
அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி