பயனர்களுக்கு மகிழ்ச்சி தகவல்: வாட்ஸ்அப்பில் வந்த புதிய அப்டேட்
வாட்ஸ்அப் சேட்களை (whatsapp Chat) நண்பர்கள், குடும்பம் என தனித்தனியாக பிரித்து ஒருங்கிணைக்கும் அம்சத்தை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தி உள்ளது.
வாட்ஸ்அப் செயலி உலகம் முழுவதும் 2 பில்லியனுக்கு அதிகமான மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இணையம் மூலம் இலவசமாக குறுஞ்செய்தி அனுப்புவது, உறையாடுவது முதல் பணப்பரிமாற்றம் செய்வது வரை பயனர்களை கவர புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.
படிக்காத செய்திகள்
தற்போது சேட்களை ஒழுங்கமைக்கும் வசதியை வாட்ஸ்அப் எளிதாக்கியுள்ளது. இதற்கு முன்பு "அனைத்தும்," "படிக்காத செய்திகள்" மற்றும் "குழுக்கள்" என 3 பட்டியலாக சேட்களை வடிகட்ட முடிந்தது.
தற்போது உள்ள புதிய அப்டேட் மூலம், நீங்கள் சொந்தமாக பட்டியல்களை உருவாக்க முடியும். சேட்களை குடும்பம், நண்பர்கள், அலுவலகம் என தனித்தனியாக பிரித்து பட்டியலிட்டு கொள்ளலாம்.
வடிகட்டி பட்டியில் உள்ள '+' அழுத்துவதன் மூலம் தனிப்பயன் பட்டியலை உருவாக்கலாம். இதில் எப்போதும் வேண்டுமானலும் தேவையான நபர்கள் அல்லது குழுக்களை சேர்க்கவோ நீக்கவோ செய்யலாம்.
வாடிக்கையாளர் விசாரணை
அத்துடன், 20 தனிப்பயன் பட்டியல்கள் வரை உருவாக்க முடியும். வணிகம் தொடர்பான பல்வேறு உரையாடல்களை நிர்வகிப்பதற்கு இது எளிமையானதாக இருக்கும்.
எடுத்துக்காட்டாக, வணிகங்கள் வாடிக்கையாளர் விசாரணைகள், ஆர்டர் கண்காணிப்பு, ஊழியர்களுடனான உரையாடல் என தனி தனி பட்டியல்களை உருவாக்கலாம். இந்த அப்டேட் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது.
சில வாரங்களில் அனைத்து பயனர்களுக்கும் இந்த அப்டேட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |