இன்று அதிகாலை வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஈரானின் செயற்கைகோள்கள்
ஈரான்(iran) உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு செயற்கைக்கோள்களான கவுசர் (Kowsar)மற்றும் ஹோடோட்(Hodhod) ஆகியவற்றை ரஷ்யாவின்(russia) தூர கிழக்கு பகுதியில் உள்ள வோஸ்டோச்னி ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தியுள்ளது.
செவ்வாயன்று(05) அதிகாலையில் ரஷ்யாவின் சோயுஸ் ரொக்கெட் ஈரானிய செயற்கைக்கோள்களை சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக கொண்டு சென்று வெடித்தது.
தனியார்துறை சார்பில் ஏவப்பட்ட முதல் ஈரானிய செயற்கைக்கோள்கள்
இது மொஸ்கோ மற்றும் தெஹ்ரான் இடையே வளர்ந்து வரும் விண்வெளி ஒத்துழைப்பை பிரதிபலிக்கிறது.
கௌசர் மற்றும் ஹோடோட், நாட்டின் தனியார் துறை சார்பில் ஏவப்பட்ட முதல் ஈரானிய செயற்கைக்கோள்கள் ஆகும்.
ஈரான் விண்வெளி அமைப்பின் தலைவர், செயற்கைக்கோள் தயாரிப்பு குழு உறுப்பினர்கள் மற்றும் ஈரான் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள ஊடகவியலாளர்கள் வெற்றிகரமாக ஏவப்பட்ட ஏவுகணையின் நேரடி ஒளிபரப்பை பார்வையிட்டனர்.
செயற்கைகோளின் ஆயுட்காலம்
30 கிலோ எடையுள்ள, கௌசர் மூன்று ஆண்டுகளுக்கும் மேலான ஆயுட்காலத்தை கொண்டது. ஹோடோட் 4கிலோ கிராம் எடையும், 500 கிலோ மீற்றர் சுற்றுப்பாதை உயரமும் சுமார் நான்கு வருட ஆயுட்காலம் கொண்டது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |