தையிட்டி விகாரை சர்ச்சை: காவல்துறையின் அடாவடி ஆரம்பமானது விசாரணை

Sri Lanka Police Human Rights Commission Of Sri Lanka Jaffna Velan Swamigal
By Theepan Mar 04, 2026 05:57 PM GMT
Report

தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவேளை கைது செய்யப்பட்டவர்கள் மீது தாம் குறைந்தளவு பல பிரயோகத்தையே மேற்கொண்டதாக மனிதவுரிமை ஆணைக்குழுவின் விசாரணைகளில் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

தையிட்டி விகாரைக்கு எதிராக கடந்த டிசம்பர் மாதம் 21ஆம் திகதி போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் வேலன் சுவாமி, வலி. கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தி. நிரோஷ் , வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட ஐவர் மீது தாக்குதலை மேற்கொண்டு காவல்துறையினர் அவர்களை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் ஐவரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

தாக்குதலுக்கு இலக்கான வேலன் சுவாமி மற்றும் வலி. கிழக்கு தவிசாளர் 

அந்நிலையில் தாக்குதலுக்கு இலக்கான வேலன் சுவாமி மற்றும் வலி. கிழக்கு தவிசாளர் ஆகியோர் மறுநாள் யாழ் . போதனா வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்றனர்.

தையிட்டி விகாரை சர்ச்சை: காவல்துறையின் அடாவடி ஆரம்பமானது விசாரணை | Police Crackdown Thaiyiti Temple Investigation

காவல்துறையினரின் தாக்குதல் மற்றும் சித்திரவதைகளுக்கு எதிராக வலி. கிழக்கு தவிசாளர் மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய காரியாலயத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில், விசாரணைகளை முன்னெடுத்த மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ், இன்றைய தினம் புதன்கிழமை முறைப்பாட்டாளரையும் , எதிராளியான காவல்துறையினரையும் தமது அலுவலகத்திற்கு அழைத்து விசாரணைகளை மேற்கொண்டார்.

காவல்துறையினர் சித்திரவதைகளை புரிந்து உடல் உள ரீதியான பாதிப்பு

குறித்த விசாரணைகள் தொடர்பில் வலி. கிழக்கு தவிசாளர் தெரிவிக்கையில். தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக போராடிய எம் மீது காவல்துறையினர் சித்திரவதைகளை புரிந்து உடல் உள ரீதியான பாதிப்புக்களை ஏற்படுத்தி எம்மை கைது செய்தனர். அரசாங்கத்தின் திட்டமிட்ட அறிவுறுத்தலின் பிரகாரமே காவல்துறையினர் எம்முடன் அவ்வாறு நடந்து கொண்டனர் என வலுவான சந்தேகம் எமக்கு உண்டு.

தையிட்டி விகாரை சர்ச்சை: காவல்துறையின் அடாவடி ஆரம்பமானது விசாரணை | Police Crackdown Thaiyiti Temple Investigation

இன்றைய விசாரணைகளின் போது, விகாரைக்கு சிங்கள மக்களும் வருகை தந்தமையால் , போராட்ட காரர்களுக்கும் , சிங்கள மக்களுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்படாது தடுக்கவே போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தோம். அவர்களை கைது செய்யும் போது குறைந்தளவு பல பிரயோகத்தையே மேற்கொண்டோம் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

காவல்துறையினர் எம்மை தேடி தேடி கைது செய்ததுடன் , அவர்களின் தடைக்கு அப்பால் எம்மை இழுத்து சென்று எம் மீது தாக்குதல் மேற்கொண்டே வாகனத்தில் ஏற்றினார்கள் என விடயத்தினையும் விசாரணைகளில் நான் தெரியபடுத்தினேன் .

எம் மீதான தாக்குதல்கள் மற்றும் சித்திரவதைகள் தொடர்பிலான ஆதாரங்கள் , சாட்சியங்கள் , அறிக்கைகள் என்பவற்றை எதிர்வரும் 14 நாட்களுக்குள் தமக்கு சமர்ப்பிக்குமாறும் , அதன் பின்னர் கொழும்பு அலுவலகத்திற்கு மேலதிக நடவடிக்கைக்காக தாம் அனுப்பி வைப்போம் என மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் தெரிவித்தார் என தவிசாளர் மேலும் தெரிவித்தார்.

சலே தொடர்பில் வெளியான புதிய தகவல்! நீதிமன்றத்தால் மறுக்கப்பட்ட கோரிக்கை

சலே தொடர்பில் வெளியான புதிய தகவல்! நீதிமன்றத்தால் மறுக்கப்பட்ட கோரிக்கை

குறைந்த விலைக்கு விற்கப்படும் நெல்! மன்னாரில் விவசாயிகளுக்கு வெளியான அறிவிப்பு

குறைந்த விலைக்கு விற்கப்படும் நெல்! மன்னாரில் விவசாயிகளுக்கு வெளியான அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024