குறைந்த விலைக்கு விற்கப்படும் நெல்! மன்னாரில் விவசாயிகளுக்கு வெளியான அறிவிப்பு

Mannar Sri Lankan Peoples Ministry of Agriculture
By Dhilak Mar 04, 2026 04:13 PM GMT
Report

மன்னார் மாவட்டத்தில் போதிய அளவு எரி பொருட்கள் கையிருப்பில் உள்ளமையினால் விவசாயிகள் அறுவடை செய்கின்ற நெல்லை இடைத்தரகர்களிடம் குறைந்த விலைக்கு விற்க வேண்டாம் எனவும், உலர வைக்கும் இயந்திரங்களை பயன்படுத்தி நெல்லைப் பாதுகாக்குமாறு அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் விவசாயிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று புதன்கிழமை (4) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வளைகுடா பகுதியில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை தொடர்ந்து மன்னார் மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக எரிபொருட்களுக்கான நெருக்கடி நிலைமை காணப்பட்டது.இந்த நிலையில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்துடன் அடிக்கடி தொடர்பில் இருந்து மன்னார் மாவட்டத்திற்கு தேவையான எரி பொருளை பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்.

எரிபொருள் :யாழ்ப்பாண மக்களுக்கு அரச அதிபர் விடுத்துள்ள அறிவிப்பு

எரிபொருள் :யாழ்ப்பாண மக்களுக்கு அரச அதிபர் விடுத்துள்ள அறிவிப்பு


தேவையான டீசல், பெட்ரோல்

பெற்றோலிய கூட்டுத்தாபனத்துடன் கலந்தாலோசித்த பிறகு, மன்னார் மாவட்டத்திற்கு தேவையான டீசல், பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவை தற்போது போதிய அளவு கையிருப்பில் உள்ளன.

குறைந்த விலைக்கு விற்கப்படும் நெல்! மன்னாரில் விவசாயிகளுக்கு வெளியான அறிவிப்பு | Don T Sell Paddy At Low Price

தற்போது நெல் அறுவடை காலம் என்பதால், அறுவடை இயந்திரங்களுக்கு தேவையான எரிபொருளை தடையின்றி வழங்குமாறு எரிபொருள் நிலைய உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எரிபொருள் தட்டுப்பாட்டைக் காரணம் காட்டி, அறுவடை இயந்திரங்களுக்கான கட்டணத்தை உயர்த்த வேண்டாம் என உரிமையாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விவசாயிகள் இடைத்தரகர்களிடம் குறைந்த விலைக்கு நெல்லை விற்க வேண்டாம் என்றும், உலர வைக்கும் இயந்திரங்களை பயன்படுத்தி நெல்லைப் பாதுகாக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்

முறைப்பாடுகள் 

தனியார் மற்றும் அரசு பேருந்து களுக்குத் தேவையான எரிபொருள் தாராளமாக வழங்கப் படுவதால், பொதுமக்கள் எவ்வித இடையூறுமின்றி பயணங்களை மேற்கொள்ள முடியும்.

குறைந்த விலைக்கு விற்கப்படும் நெல்! மன்னாரில் விவசாயிகளுக்கு வெளியான அறிவிப்பு | Don T Sell Paddy At Low Price

கடற்றொழிலுக்கு தேவையான மண்ணெண்ணெய் விநியோகம் தடையின்றி நடைபெறுகிறது. மீனவர்கள் தங்களுக்கு அருகிலுள்ள நிலையங்களில் எரி பொருளைப் பெற்றுக் கொள்ளலாம்.

எரிபொருள் விநியோகம் தொடர்பாக ஏதேனும் சிரமங்கள் அல்லது முறைப்பாடுகள் இருந்தால், மாவட்டச் செயலகம் மற்றும் விவசாயிகள் கமலநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் அலுவலகத்திலும், மீனவர்கள் கடற்றொழில் உதவிப் பணிப்பாளர் அலுவலகத்திலும் முறைப்பாடு தெரிவிக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

ஈரானிய கடற்படையை மீட்ட சிறிலங்கா!

ஈரானிய கடற்படையை மீட்ட சிறிலங்கா!

மூன்றாம் உலகப்போர் மூளும் : ரஷ்யா கடும் எச்சரிக்கை

மூன்றாம் உலகப்போர் மூளும் : ரஷ்யா கடும் எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022