வட்ஸ்அப்பில் அதிக மோசடிகள்! அறிமுகமாகியுள்ள புதிய அம்சம்
அண்மைக்காலமாக வட்ஸ்அப்பில் அதிக மோசடிகள் மற்றும் ஸ்பாம் அழைப்புகள் வரத் தொடங்கியுள்ளன, இவ்வாறான அழைப்புகள் வட்ஸ்அப் பயனர்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.
அந்தவகையில், இந்த பிரச்சனைகளை சரி செய்யும் பொருட்டு வட்ஸ்அப் தற்போது புதிய புதுப்பிப்பு அம்சம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதில், வட்ஸ்அப்பில் வரும் ஸ்பாம் அழைப்புகளை தடுக்கும் வசதி உள்ளதாக கூறப்படுகிறது, வட்ஸ்அப் அமைப்புகளில் (settings) இருக்கும் இந்த அம்சத்தினை செயற்படுத்துவதன் மூலமாக ஸ்பாம் அழைப்புகளினால் ஏற்படும் பிரச்சினைகளில் இருந்து பாதுகாப்புப் பெறலாம்.
ஸ்பாம் அழைப்புகள்
வட்ஸ்அப் அமைப்புகளில் (settings) உள்ள தெரியாத அழைப்பாளர்களை அமைதிப்படுத்தும் விருப்பத்தை செயற்படுத்த வேண்டும் (Silence unknown callers ).
இந்த அம்சத்தை இயக்கிய பிறகு, ஸ்பாம் அழைப்புகளை தானாக இல்லாமல் செய்து, பயனர்கள் ஸ்பாம் அழைப்புகளைப் பெறாமல் இருக்கும் வகையில் உதவுகிறது.
இந்த அம்சத்தினை செயன்முறைப்படுத்தும் படிமுறைகளை சரியாக பின்பற்றி குறித்த அம்சத்தை செயற்படுத்த வேண்டும்.
தொலைபேசி ரிங் ஆகாது
ஸ்மார்ட்போனில் வட்ஸ்அப்பை (WhatsApp) திறந்து "Settings" என்பதைத் தட்ட வேண்டும், பின்னர் "பிரைவசி"க்குச்(Privacy) சென்று அதில் "அழைப்புகள்”(Call) என்பதைத் தட்ட வேண்டும், பின்னர் அதிலுள்ள தெரியாத அழைப்பாளர்களை அமைதிப்படுத்தும் விருப்பத்தை செயற்படுத்த வேண்டும் (Silence unknown callers).
இதனை செயற்படுத்திய பின் தெரியாத எண் உங்களை வட்ஸ்அப்பில் அழைக்கும் போது உங்கள் தொலைபேசி ரிங் ஆகாது, எனவே உடனடியாக இந்த அம்சத்தை செயற்படுத்தி அநாவசியமாக இடம்பெறும் மோசடிகளில் இருந்து பாதுகாப்புப் பெற முடியும் என்று கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |