கொத்து ரொட்டி பிரியர்களுக்கு மகிழ்ச்சி தகவல்! ஏற்பட்ட மாற்றம்
Food Shortages
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Sri Lanka Food Crisis
By pavan
கொத்து ரொட்டியின் விலை குறைந்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவின் மொத்த விலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியை கருத்திற் கொண்டே குறித்த விலை குறைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, நாளை (16) முதல் கொத்து ரொட்டியின் விலை 50 ரூபாவினால் குறைக்கப்படும் என சங்கம் தெரிவித்துள்ளது.
ஏனைய பொருட்களின் விலை
எவ்வாறாயினும், மா உற்பத்தியிலான ஏனைய பொருட்களின் விலை குறைக்கப்பட மாட்டாது என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்நிலையில், தற்போது கொத்து ரொட்டி ஒன்றின் விலையானது ரூபா 500 முதல் பல்வேறு விலைகளில் விற்பனை செய்யப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி