உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் எப்போது?கல்வியமைச்சர் வௌியிட்ட தகவல்
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடத்தப்படுமென அறிவிக்கப்பட்ட உயர்தர மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகள் மீண்டும் எப்போது நடத்தப்படுமென்பதை எதிர்வரும் திங்களன்று அறிவிக்கவுள்ளதாக கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (13) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கொவிட் 19 காரணமாக குறித்த பரீட்சைகளை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடத்துவதா? இல்லையா என்பது தொடர்பில் ஆராய வேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதன்படி, மாகாண கல்வி பணிப்பாளர்கள், அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடி அது தொடர்பான தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்தார்.
குறித்த பரீட்சைகள் நடத்தப்படும் தினங்கள் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் அறிவிப்பொன்றை வெளியிடவுள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.