பாடசாலைகள் எப்போது ஆரம்பம் - வெளியானது உறுதியான அறிவிப்பு
நாட்டில் அதிகரித்துச் செல்லும் கொரோனா தொற்றை அடுத்து கல்விச் செயற்பாடுகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் பாடசாலைகள் மீளவும் எப்போது ஆரம்பமாகும் என்ற தகவலை கல்வி அமைச்சர் ஜி. எல். பீரிஸ் அறிவித்துள்ளார்.
பாடசாலைகளை மீண்டும் படிப்படியாக திறக்கக்கூடிய பின்புலத்தை முறையாக வகுப்பது தொடர்பில் நேற்று (16) நடைபெற்ற விசேட கலந்துரையாடலுக்குப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அமைச்சர் குறிப்பிட்டதாவது,
நாட்டில் கொவிட் 19 தொற்று நிலைமை தணிந்து சிறந்த சூழ்நிலை ஏற்பட்ட பின்னரே கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும்.
பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான முதற்கட்டமாக, ஆசிரியர்கள் உள்ளிட்ட கல்வி துறையைச் சேர்ந்த பணியாளர்களுக்கு கொவிட் 19 தொற்று தடுப்பூசி ஏற்றப்படும் நடவடிக்கை அமையும் என்றும் அமைச்சர் கூறினார்.