கடன் வழங்குவதில் இழுபறி..! ஐ.எம்.எப் இன் புதிய அறிவிப்பால் நிர்க்கதியான சிறிலங்கா
இலங்கைக்கு வழங்கப்படவுள்ள 2.9 பில்லியன் டொலர் கடனுக்கு தமது பணிப்பாளர் சபை எப்போது அங்கீகாரம் வழங்கும் என நிச்சயமாகக் கூற முடியாது என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
அத்துடன், கடன் வழங்குநர்களுடனான, இலங்கையின் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தையின் வெற்றியைப் பொறுத்து காலம் தீர்மானிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதியொருவர் இந்த விடயத்தினை தெரிவித்தார்.
சிறிலங்கா அரசாங்கத்தின் ஊகிப்பு
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான சிரேஷ்ட தூதுக்குழுவின் தலைவர் பீட்டர் ப்ரூவர் மற்றும் இலங்கை தலைவர் மசாஹிரோ நோசாகி ஆகியோர் நிக்கி ஏஷியா ஆகியோர் இலங்கைக்கான கடன் தொடர்பில் விளக்கமளித்துள்ளனர்.
அதில், "கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளுக்கு நேரம் எடுப்பதால், நிதியை வழங்கும் காலக்கெடுவை எதிர்வுகூறுவது மிகவும் கடினம். சம்பந்தப்பட்ட தரப்பினர் பேச்சுவார்த்தைகளை விரைவுபடுத்த வேண்டும். அப்போதுதான், எதிர்கொள்ளும் நெருக்கடியிலிருந்து இலங்கை விரைவாக வெளியேற முடியும் என தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, நிதி அமைச்சு மற்றும் மத்திய வங்கியின் தரவுகளுக்கமைய, சீனா, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகியவை இலங்கையின் முதன்மையான மூன்று இருதரப்பு கடன் வழங்குநர்களாக உள்ளனர்.
இலங்கை்கான மொத்தக் கடனில் சீனா 52%, ஜப்பான் 19.5% மற்றும் இந்தியா 12% என்ற வீதத்தில் வழங்கியுள்ளன.
எவ்வாறாயினும், சர்வதேச நாணய நிதியத்துடன், பணியாளர் மட்ட உடன்பாட்டின் ஊடாக அங்கீகரிக்கப்பட்ட 2.9 பில்லியன் டொலர்களுக்கு, எதிர்வரும் டிசெம்பர் மாதத்திற்குள் சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை அங்கீகாரம் வழங்கும் என இலங்கை அரசாங்கம் ஊகிக்கிறமை குறிப்பிடத்தக்கது


புத்திர சோகத்தில் ஈழ அன்னையர்கள்... இன்று அன்னையர் தினம்… 13 மணி நேரம் முன்
