பாடசாலைகள் எப்போது மீண்டும் ஆரம்பமாகும்? -கல்வியமைச்சர் இன்று வெளியிட்ட அறிவிப்பு
அனைத்து ஆசிரியர்களுக்கும் கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டவுடன் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் நாடாளுமன்றத்தில் இன்று (3) தெரிவித்தார்.
நாட்டின் 84 சதவீத ஆசிரியர்களுக்கு ஏற்கனவே முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே கல்வி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஆசிரியர்களின் வேலைநிறுத்தம் குறைந்த வசதியுள்ள சிறுவர்களுக்கு பெரும் அநீதியை ஏற்படுத்தியதாகவும், மற்ற காலங்களை விட கற்றலில் அதிக ஈடுபாடு தற்போது அவர்களுக்கு காட்டப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நிலைமை காரணமாக, ஆசிரியர்கள் தங்கள் சிறுவர்களின் கல்வியில் அதிக கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று அவர் கூறினார்.
பாடசாலைகளை எப்போதும் மூடி வைக்க முடியாது என்று கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.