தேர்தல் நடைபெறுமா - விமலுக்கு ஏற்பட்ட சந்தேகம்
எவரும் நினைத்துப் பார்க்காத வெற்றி, மேலவை இலங்கை கூட்டணிக்குக் கிடைக்கும் என தெரிவித்துள்ள அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, தேர்தல் நடக்குமா என்கிற உறுதியற்ற நிலையே காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
புதிய கூட்டணி ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதனாலேயே கூட்டணி அமைப்பதில் சில காலதாமதங்கள் ஏற்பட்டுள்ளன. எவ்வாறாயினும் விரைவில் நல்ல அறிவிப்புகளை வழங்குவோம் என்றார்.
கட்டுப்பணம் செலுத்தும் மொட்டு
தேர்தல் நடக்குமா என்பதை உறுதியாகக் கூற முடியாது. சிறிலங்கா பொதுஜன பெரமுன சம்பாதித்த பணங்கள் அதிகம். அதனாலேயே கட்டுப்பணத்தைச் செலுத்தி வருகிறது என்றார்.
தேர்தலை எந்நேரம் வேண்டுமாக இருந்தாலும் பிற்போடுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அதுபோல நாட்டு மக்களிடத்திலும் தேர்தல் தொடர்பில் போதிய ஆர்வம் இல்லை என்பதால் அதனை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்ளும் நிலையும் காணப்படுகிறது.
எவரும் நினைக்காத வெற்றி
ஜே.வி.பியினருக்கு நினைப்பதுபோல, மக்கள் ஆதரவு
பெரிதாக இல்லை. கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில்
கைப்பற்றிய திஸ்ஸமஹராமவைக்கூட அவர்களால்
கட்டியெழுப்ப முடியாமல் போனது. நாம் அமைக்க
உள்ள கூட்டணி அனைவருக்கும் சவாலாக இருக்கும்.
எவரும் நினைக்காத வெற்றி கிடைக்கும் என்றார்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
