உலகை மிரட்டவுள்ள எல் நினோ தாக்கம் - பாதிக்கப்படவுள்ள முக்கிய நாடுகள்!

United States of America Australia Japan India Climate Change
By Beulah Jun 12, 2023 03:30 AM GMT
Report

எல் நினோ - தெற்கத்திய அலைவு  கடல், வளிமண்டல சுழற்சியில் ஏற்படும் வெப்பம், காற்றின் மாறுதல்கள் மற்றும் அதனால் எற்படும் விளைவுகளால் உலக நாடுகளில் உள்ள சில பகுதிகளில் பருவநிலைகளில் பாதிப்புக்களை உண்டாக்கும் ஒர் நிகழ்வு ஆகும்.

இந்நிகழ்வு சராசரியாக 5 முதல் 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் எனக் கூறப்படும் நிலையில், இந்த ஆண்டு (2023) எல் நினோ ஆண்டு என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்த எல் நினோ நிகழ்வால் உலகம் முழுவதும் பரவலாக ஆண்டின் பிற்பகுதியில் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க தேசிய கடல்சார் மற்றும் வானிலை ஆராய்ச்சி அமைப்பான US National Oceanic and Atmospheric Administration - NOAA தெரிவித்துள்ளது.

பொதுவாகக் குறிப்பிட வேண்டுமென்றால் அதீத மழை, திடீர் புயல், மிதமிஞ்சிய வறட்சி போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.

எல் நினோ என்றால் என்ன?

உலகை மிரட்டவுள்ள எல் நினோ தாக்கம் - பாதிக்கப்படவுள்ள முக்கிய நாடுகள்! | Which Countries Are Worst Affected By El Nino

எல் நினோ என்பது உலகம் முழுவதும் பரவலாக பல்வேறு பகுதிகளிலும் வெப்பநிலையை உயரச் செய்யும் ஒரு வகை காலநிலை நிகழ்வு.

பசிபிக் கடல் பரப்பில் ஏற்படும் வெப்பநிலை அதிகரிப்புதான் 'எல் நினோ' என்று விஞ்ஞானிகள் விளக்கம் தருகின்றனர்.

பசிபிக் கடல்பரப்பு வெப்பநிலையை ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு அதாவது, 7 முதல் 24 மாதங்கள் வரை அதிகமாக்கும் நிகழ்வாகும்.

இந்த எல் நினோ எவ்வளவு வலிமையானதாக இருக்கிறது என்பதைப் பொறுத்துதான் அதீத மழை பெய்வதோ அல்லது கடுமையான வறட்சி ஏற்படுவதோ நிர்ணயமாகும்.

பருவம் தப்பிய மழையும் கேடு, பருவம் தவறிய வெப்பமும் கேடு. இவை இரண்டுமே மக்கள் மீது, பொருளாதாரம் மீது பாதிப்பினை ஏற்படுத்தும்.

அதனால்தான் உலகக் கவனம் முழுவதும் இந்த காலநிலை நிகழ்வு மீது குவிந்திருக்கிறது.

இந்நிலையில், என்.ஓ.ஏ.ஏ-வின் விஞ்ஞானி மிச்செல் எல் ஹூரெக்ஸ் வியாழக்கிழமை ஓர் அறிக்கையை அதன் இணையதளத்தில் வெளியிட்டார்.

அதில் அவர், ”எல் நினோவால், உலகளவில் எந்தெந்தப் பகுதிகளில் தற்போது வழக்கத்துக்கு மாறான அதீத வெப்பநிலை நிலவுகிறதோ அந்தந்தப் பகுதிகளில் இன்னும் வெப்பநிலை அதிகரிக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அவுஸ்திரேலியா

உலகை மிரட்டவுள்ள எல் நினோ தாக்கம் - பாதிக்கப்படவுள்ள முக்கிய நாடுகள்! | Which Countries Are Worst Affected By El Nino

அதேபோல் அவுஸ்திரேலியா அரசு இவ்வாரத் தொடக்கத்தில் வெளியிட்ட அறிவிப்பில், எல் நினோவால் நாட்டில் வறட்சியான நாட்கள் அதிகமாக இருக்கும்.

வெப்பமும் சற்று அதிகமாகக் காணப்படும் என்று தெரிவித்துள்ளது.

ஜப்பான் 

உலகை மிரட்டவுள்ள எல் நினோ தாக்கம் - பாதிக்கப்படவுள்ள முக்கிய நாடுகள்! | Which Countries Are Worst Affected By El Nino

ஜப்பான் நாடோ கடுமையான காட்டுத்தீ ஏற்படலாம் என்று கணித்துள்ளது.

ஜப்பானில் இந்த ஆண்டு வசந்த காலம் வழக்கத்தைவிட வெப்பம் நிறைந்ததாக இருந்ததற்கு எல் நினோ நிகழ்வே காரணமாக இருக்கலாம் என்றும் கூறியுள்ளது.

அமெரிக்கா

உலகை மிரட்டவுள்ள எல் நினோ தாக்கம் - பாதிக்கப்படவுள்ள முக்கிய நாடுகள்! | Which Countries Are Worst Affected By El Nino

அமெரிக்காவில் கோடையிலேயே எல் நினோ தன் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது சற்று தள்ளிப்போனது.

வசந்த கால பிற்பகுதியில் கொஞ்சம் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் குளிர்காலம் நெருங்கும்போது எல் நினோவின் விளைவு கடுமையாகும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இதனால் அமெரிக்காவின் சில பகுதிகளில் குறிப்பாக தெற்கு கலிபோர்னியாவிலிருந்து மெக்சிகோ வளைகுடா வரை வழக்கத்தைவிட சற்று அதிகமான குளிரும், வடமேற்கு பசிபிக்கிலிருந்து ஓஹியோ பள்ளத்தாக்கு வரை வழக்கத்துக்கு மாறான வறட்சியும் நிலவும் என்று கூறப்பட்டுள்ளது.

அதேபோல் நாட்டின் வடக்கு மாகாணங்களில் வழக்கத்துக்கு மாறான அளவில் வெப்பம் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியா

 உலகை மிரட்டவுள்ள எல் நினோ தாக்கம் - பாதிக்கப்படவுள்ள முக்கிய நாடுகள்! | Which Countries Are Worst Affected By El Nino

இந்தியாவைப் பொறுத்தவரை எல் நினோ பாதிப்பு அதன் தாக்கத்தை ஏற்படுத்த 70 சதவீதம் வாய்ப்புகள் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம், வேளாண் ஆராய்ச்சிக் கழகங்கள் ஆகியன இணைந்து தற்போதிருந்தே இந்தத் தாக்கத்தை எப்படி சமாளிப்பது என்பது தொடர்பாக ஆலோசனைகளைத் தொடங்கியுள்ளனர்.

எல் நினோவின் தாக்கம் ஜூலை 2023 முதல் இந்தியாவைப் பாதிக்கத் தொடங்கும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.

மேலும், இந்தியாவில் இதுவரை 'எல் நினோ' காலநிலை நிகழ்வு நீடித்து வந்ததால், அதன் பின்னர் வரும் 'எல் நினோ' ஆண்டில் பருவமழை பற்றாக்குறைக்கான சூழலை உருவாக்கலாம் என்று அச்சம் தெரிவித்துள்ளனர்.

3 ட்ரில்லியன் அளவில் இழப்பு

உலகை மிரட்டவுள்ள எல் நினோ தாக்கம் - பாதிக்கப்படவுள்ள முக்கிய நாடுகள்! | Which Countries Are Worst Affected By El Nino

இந்த ஆண்டு எல் நினோ விளைவால் சர்வதேச அளவில் 3 ட்ரில்லியன் அளவுக்கு பொருளாதார இழப்புகள் ஏற்படலாம் என்று ஓர் அறிவியல் இதழில் வெளியான ஆய்வுக் கட்டுரையில் கணிக்கப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றத்தால் விவசாய உற்பத்தி பாதிக்கப்பட்டு, தொழில்கள் நலிந்து, நோய்கள் மலிந்து பொருளாதார தேக்கம் ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அதனால் பெரு போன்ற தென் அமெரிக்க கண்ட நாடுகள் எல் நினோ விளைவை எதிர்கொள்ள 1.06 பில்லியன் டாலர் நிதியை ஒதுக்கீடு செய்து வைத்துள்ளது.

புயல்களால் அதிக பாதிப்புகளை சந்திக்கும் பிலிப்பைன்ஸ் நாடும் அரசாங்க சிறப்புக் குழுவை அமைத்து இப்போதிருந்தே பாதிப்புகளைக் கணிக்கவும், விளைவுகளை சமாளிக்கவும் திட்டங்களை தீட்ட முனைப்பு காட்டி வருகிறது. 

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

12 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

மதவுவைத்தகுளம், பாவற்குளம், கரம்பைமடு

16 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் மண்கும்பான் கிழக்கு, Jaffna, Ivry-sur-Seine, France, புங்குடுதீவு 1ம் வட்டாரம்

12 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செட்டிக்குளம், Vitry-sur-Seine, France

13 Sep, 2025
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், London, United Kingdom

26 Aug, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016