அத்தியாவசிய உணவுப்பொருட்களில் இரசாயனம்: விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை
இலங்கையின் சந்தையில் நுகர்வோருக்கு விற்பனை செய்யப்படும் உணவுகளில் 90 வீதத்திற்கும் அதிகமானவை பாவனைக்கு தகுதியற்றவையென தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த தகவலை இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் உறுப்பினர் பொது சுகாதார பரிசோதகர் சந்துன் ரத்நாயக்க (Sandhun Ratnayake) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், அரிசி, பருப்பு, உப்பு, எண்ணெய் மற்றும் மரக்கறிகள் உட்பட நாம் அன்றாடம் உண்ணும் பெரும்பாலான அத்தியாவசிய உணவுப் பொருட்களில் வியாபாரிகள் இரசாயனப் பொருட்களைச் சேர்ப்பதால் இவ்வாறான நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விற்பனை
அத்தோடு பட்டர் கேக் உட்பட சந்தையில் விற்பனை செய்யப்படும் பல வகையான கேக்குகளில் பட்டர் தவிர முட்டைகள் எதுவும் இல்லையென சந்துன் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலைமை தொடர்பாக பொறுப்புள்ள தரப்பினரிடையே உடனடி மற்றும் விரிவான பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
இல்லாவிட்டால் இன்னும் ஐந்து மற்றும் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டில் தொற்றா நோய்களால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என சந்துன் ரத்நாயக்க எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |