உங்களுக்கு இளநரை இருக்கிறதா..! இதை மட்டும் சாப்பிட்டால் போதும் உடனடி பலன்
ஆண்களாக இருக்கட்டும் சரி பெண்களாக இருக்கட்டும் சரி அனைவருக்கும் உள்ள பொதுவான பிரச்சனை இளவயதில் முடி நரைப்பதாகும்.
இதனால் பெரும்பாலானோர் மனஉளைச்சலுக்கு ஆளாகுகின்றனர்.
உங்களுக்கு சிறுவயதில் இருந்தே இளநரை இருக்கின்றவர்கள் முடியை கருப்பாக மாற்றுவதற்கு பல செயற்கை முறைகளை நாடுகின்றனர்.
ஆகவே நரைமுடியை இயற்கை முறையிலேயே கருமையாக மாற்ற முடியும்.
முக்கிய மூலிகை கறிவேப்பிலை
அந்தவகையில் முடியின் ஆரோக்கியத்திற்கு நன்மை செய்யும் முக்கிய மூலிகை கறிவேப்பிலை தான். நரை முடியை பொறுத்தவரை கறிவேப்பிலையில் அடங்கி இருக்கும் விட்டமின் கலவைகள் முடியின் நிறம் மாறும் செயல்முறையை தாமதப்படுத்த உதவுகிறது.
பெரும்பாலும் ஊட்டச்சத்து குறைபாடுகள் முடி வெள்ளையாவதற்கு காரணம் என்று குறிப்பிடப்படும் நிலையில், கறிவேப்பிலையில் அடங்கி இருக்கும் விட்டமின் C, D, B மற்றும் இரும்புச்சத்துக்கள் கருப்பாக இருக்கும் முடி விரைவில் நிறம் மாறுவதை தடுக்கிறது.
கறிவேப்பிலையில் உள்ள விட்டமின் B மற்றும் D உள்ளிட்டவை முடி நிறம் இழப்பதை தடுக்கின்றன.
முடியின் நிறம் மாறும்
மெலனின் இழப்பு காரணமாக முடியின் நிறம் மாறுகிறது என்பதால், கறிவேப்பிலையில் இருக்கும் மதிப்புமிக்க ஆன்டிஆக்சிடென்ட்கள் மற்றும் B விட்டமின்கள் மயிர்க்கால்களில் மெலனின் உற்பத்தியில் நல்ல விளைவை ஏற்படுத்துகிறது என்றும் கூறப்படுகிறது.
எனவே நரைமுடி ஏற்கனவே உள்ளவர்கள் அல்லது முடியின் ஆரோக்கியம் நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புவோர் உணவில் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை தூக்கி எறியாமல் சாப்பிட வேண்டும்.
இல்லை என்றால் கறிவேப்பிலையை பொடியாக அரைத்து வைத்து கொண்டு தினமும் தவறாமல் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.
அதே போல கறிவேப்பிலை கொண்டு தயாரிக்கப்பட்ட எண்ணெயை தலைக்கு தொடர்ந்து பயன்படுத்தி வருவதும் முடி வெள்ளையாகும் செயல்முறையை தாமதப்படுத்தும்.
