அழுது புரண்ட நடிகை அமெரிக்கா அளித்த பதிலடி
மெக்சிகோ(mexico) மற்றும் இத்தாலி (italy)வம்சாவளியை சேர்ந்த பிரபல அமெரிக்க பாப் பாடகி செலினா கோம்ஸ் தனது மக்கள் அமெரிக்காவில்(us) கொடுமைப்படுத்தப்படுவதாகவும் தன்னால் எதுவும் செய்யமுடியவில்லை எனவும் கூறி கண்ணீர் விட்டு கதறி அழுது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காணொளி ஒன்றை சமீபத்தில் வெளியிட்டார்.
சில மணி நேரங்களிலேயே அதை அவர் நீக்கினார். ஆனால் இந்த காணொளி இணையத்தில் வைரலானது.
அமெரிக்கா அளித்த பதிலடி
இந்நிலையில் இந்த காணொளிக்கு வெள்ளை மாளிகை பதிலடி கொடுத்துள்ளது. சட்டவிரோத குடியேறிகளால் கொல்லப்பட்டதாக கூறப்படும் 3 நபர்களுடைய தாய்மார்களின் காணொளியை வெள்ளை மாளிகை பகிர்ந்துள்ளது.
Selina Gomez is being cancelled for what everyone is calling fake crying over illegals being deported... "All my people are getting attacked."
— Feisty-n-Friends ⭐⭐⭐ (@FriendsFeisty) January 28, 2025
She was quickly reminded when she supported Obama doing the same thing in 2014.
... she ended up taking the video down. pic.twitter.com/eKPZyQGOXG
கெய்லா ஹாமில்டன், ஜோஸ்லின் நுங்கரே மற்றும் ரேச்சல் மோர் ஆகியோரின் பிள்ளைகள் சட்டவிரோத 'ஏலியன்'களால் கொல்லப்பட்டனர். செலினா கோம்ஸ்-க்கும் நமது எல்லைகளைப் பாதுகாப்பதை எதிர்ப்பவர்களுக்கும் இந்த துணிச்சலான தாய்மார்கள் சொல்வது இதுதான் என்று இந்த காணொளியை வெள்ளை மாளிகை பகிர்நதுள்ளது.
யாருக்காக அழுகிறீர்கள்
அதில் பேசும் அவர்கள், 'நீங்கள் [செலினா கோம்ஸ்] யாருக்காக அழுகிறீர்கள் என உங்களுக்கு தெரியாது. சட்டவிரோத குடியேறிகளால் வன்கொடுமை செய்யப்பட்டு, அடித்து கொடூரமாக கொல்லப்பட்ட எங்கள் பிள்ளைகளுக்கு என்ன பதில். அவர்கள் எங்கள் பிள்ளைகளுக்காக அழவில்லையே' என்று தெரிவித்தனர்.
Kayla Hamilton, Jocelyn Nungaray, and Rachel Morin were murdered by illegal aliens.
— The White House (@WhiteHouse) January 31, 2025
Their courageous mothers had something to say to @SelenaGomez and those who oppose securing our borders. Watch ⬇️ pic.twitter.com/KfsqQGwhqj
மேலும் செலினா கோம்ஸ் பொய்யான அழுகையை வெளிப்படுத்தி நாட்டில் சட்டமற்ற நிலையை ஊக்குவிப்பதாக அவர்கள் குற்றம்சாட்டினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |