அமெரிக்கா பறந்தார் பெஞ்சமின் நெதன்யாகு
இஸ்ரேலிய(israel) பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (benjamin netanyahu)அதிகாரபூர்வ வெளிநாட்டு பயணமாக அமெரிக்கா(us) சென்றடைந்துள்ளார்.
பெஞ்சமின் நெதன்யாகு இன்று (02) காலை வோஷிங்டன், டி.சி.யை வந்தடைந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தப் பயணத்தின் போது, இஸ்ரேலியப் பிரதமர் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்(donald trump) மற்றும் பல உயர்மட்டத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
ட்ரம்ப் சந்திக்கப்போகும் முதல் வெளிநாட்டு தலைவர்
டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பின்னர் ஒரு வெளிநாட்டுத் தலைவருடனான அவரது முதல் சந்திப்பு இது என்றும் கூறப்படுகிறது.
ஹமாஸுடனான இரண்டாம் கட்ட போர் நிறுத்தம்
ஹமாஸுடனான இரண்டாம் கட்ட போர் நிறுத்தம் தொடர்பாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அமெரிக்க ஜனாதிபதி இடையே பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வோஷிங்டனில் தனது உயர்மட்ட கலந்துரையாடலுக்கு பின்னர் இஸ்ரேலிய பிரதமர் வியாழக்கிழமை இஸ்ரேலுக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |