ட்ரம்பின் உடல் நிலை குறித்து வெளியான அறிவிப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் (Donald Trump) உடல்நிலை மிகவும் சீராக உள்ளதாக வெள்ளை மாளிகை வைத்தியர் அறிவித்துள்ளார்.
ட்ரம்ப் உடல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு இரண்டு நாட்கள் கடந்த பிறகு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, ட்ரம்ப் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையில் இருப்பதாகவும், அமெரிக்க ஜனாதிபதி பொறுப்பையும், தலைமை தளபதி பொறுப்பையும் கவனிக்கும் அளவுக்கு உடல் தகுதியுடன் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
சீரான இதய துடிப்பு
மேலும், அவர் கண்புரை அறுவை சிகிச்சை செய்துள்ளதாகவும் கொழுப்புச்சத்து அளவில் முன்னேற்றம் காணப்படுகின்ற போதிலும் ரத்த அழுத்தம், இதய துடிப்பு ஆகியவை சீராக உள்ளன என்று கூறப்பட்டுள்ளது.
அத்துடன், ஜூன் 14 ஆம் திகதியுடன் ட்ரம்பிற்கு 79 வயதாகிறது, 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஜனாதிபதியாக இருந்தபோது இருந்த உடல் எடையில் தற்போது 20 பவுண்டு எடை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
