கோதுமை மாவு விலை உயர்விற்கு அனுமதி அளித்தது யார்...! நாடு முழுவதும் அதிரடி சோதனை
நுகர்வோர் விவகார அதிகாரசபையிடம் முன் அறிவிப்போ அல்லது உடன்பாடோ இன்றி கோதுமை மாவு விலை ரூ. 13 உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, அந்த அதிகாரசபை நாடு தழுவிய சோதனைகளைத் தொடங்கியுள்ளது.
இந்த விலை உயர்வு குறித்து ஊடகச் செய்திகள் மூலமாகவே அதிகாரசபை அறிந்துகொண்டதாகவும், கோதுமை மாவு உற்பத்தியாளர்களிடமிருந்து எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் தங்களுக்கு வரவில்லை என்றும் நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலைவர் ஹேமந்த சமரகோன் கூறினார்.
நுகர்வோர் விவகார அதிகாரசபை
விலை திருத்தம் மற்றும் விலை உயர்வு குறித்த விவரங்களைக் கோரி, அதிகாரசபை உற்பத்தியாளர்களை மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டதாக அவர் தெரிவித்தார்.

நுகர்வோர் விவகார அதிகார சட்டத்தின் கீழ் கோதுமை மாவு ஒரு குறிப்பிட்ட பண்டமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது என்றும், எனவே விலையை உயர்த்துவதற்கு முன்பு உற்பத்தியாளர்கள் அதிகாரசபையுடன் கலந்தாலோசித்து ஒரு உடன்பாட்டிற்கு வர வேண்டும் என்றும் தலைவர் விளக்கினார்.
வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை
சட்டத்தை மீறி, கோதுமை மாவை அதிக விலைக்கு விற்கும் வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்தார்.

உற்பத்தியாளர்களின் பதில்களை ஆய்வு செய்த பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கை தீர்மானிக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |