ஜெனீவா செல்லத் தயாரானது இலங்கை பிரதிநிதிகள் குழு
United Nations
Ali Sabry
Sri Lanka
By pavan
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது அமர்வில் கலந்து கொள்வதற்காக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான குழுவொன்று இன்று (5) ஜெனீவா செல்லவுள்ளது.
இந்த குழுவில் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் உட்பட வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளும் உள்ளடங்குகின்றனர்.
மனித உரிமைகள் பேரவையின் 51 வது கூட்டத்தொடர் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 12ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதோடு அதில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி அலி சப்ரி உரையாற்றவுள்ளார்.
பிரச்சனைகளுக்கு தீர்வு

இந்த அமர்வுகளில், இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் வெளி தரப்பினரின் தலையீடு நிராகரிக்கப்படும் எனவும் உள்நாட்டுப் பொறிமுறைகளின் கீழ் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும் எனவும் வெளிவிவகார அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி