கொரோனா குறித்து உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள புதிய எச்சரிக்கை
நேற்று ஒரு நாளில் மட்டும் புதிதாக 5 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் சிரேஷ்ட விஞ்ஞானி செளமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
தொற்று பாதிப்பு ஏற்பட்டு ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகள் கடந்து விட்டாலும் கூட தொற்றின் வீரியம் குறைந்தபாடில்லை. கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து பல அலைகளாக தாக்கத்தொடங்கியுள்ளது. இதனால், உலக நாடுகள் விழி பிதுங்கி நிற்கின்றன என்று தெரிவித்தார்.
உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று இன்னமும் குறையவில்லை. எனவே மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
ஒரே நாளில் புதிதாக 5 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. மேலும், 9300 பேர் பலியாகியுள்ளனர்.
கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதற்கு டெல்டா வகையைச் சேர்ந்த வைரஸே காரணம்.
வைரஸ் பரவலை தடுக்கக்கூடியது தடுப்பூசி மட்டுமே. ஆனால் பல நாடுகளில் தடுப்பூசி செலுத்துவது ஆமை வேகத்தில் நடக்கிறது.
எனவே தற்போதைய சூழலில் சமூக இடைவெளி, முககவசம் மற்றும் கட்டுப்பாடுகள் மட்டுமே பயனளிக்கிறது. எனவே கொரோனா தளர்வுகளை அறிவிக்கும்போது ஒவ்வொரு நாடுகள் கவனத்துடன் கையாள வேண்டும்” என்று உலக சுகாதார அமைப்பின் சிரேஷ்ட விஞ்ஞானியான செளமியா சுவாமிநாதன் மேலும் தெரிவித்துள்ளார்.