பௌத்த மதத்தை இழிவுபடுத்திய நபர்: நீதிமன்றம் எடுத்த அதிரடி தீர்மானம்
பௌத்த மதத்தை இழிவுபடுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள மஹிந்த கொடிதுவக்கு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மனநல பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் சிறைச்சாலை வைத்தியசாலையின் மனநல பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பௌத்த தத்துவத்திற்கு களங்கம் ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள மகிந்த கொடிதுவக்குவவின் மனநல மருத்துவ அறிக்கையை கோருமாறு கோட்டை நீதவான் திலின கமகே அண்மையில் உத்தரவிட்டார்.
வழக்கு விசாரணை
கடந்த 16ஆம் திகதி கோட்டை நீதவான் நீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் தற்போது சிறைச்சாலை வைத்தியசாலையின் மனநல பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சந்தேகநபர் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை சிறைச்சாலை வைத்தியசாலையில் உள்ள மனநலப் பிரிவு வைத்தியர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |