எந்தவித அறிகுறியும் இல்லாமலே ஏற்படும் ஹெர்னியா - சுகாதார ஸ்தாபன அறிக்கை
ஹெர்னியா பாதிப்பு உலகில் பலருக்கு உருவாவதாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.
வயிற்றுப் பகுதியின் அடிப்புறச் சுவர், சில பகுதிகளில் நலிந்து, வலுவிழந்து காணப்படும்.
அந்த சூழ்நிலையில், சிறுகுடல் கீழே இறங்குகின்ற செயட்படை ஹெர்னியா அதாவது, குடலிறக்கம் என்று அழைக்கப்படுகிறது.
ஹெர்னியா பாதிப்பு

வயிற்றுப்பகுதி தசைகள் பலவீனமாகும்போது, அதற்கு உள்ளே உள்ள உறுப்புகள் தனது இடத்தை விட்டு வெளியேறும்போது, ஏற்படும் நிலைக்கு ஹெர்னியா என்று கூறப்படுகிறது.
சற்று நெகிழ்வாக இருக்கும் நமது வயிற்றுப் பகுதி, அதிலும் தொப்புளைச் சுற்றியிருக்கும் தசைகள் மிகவும் மென்மையானவையாக இருக்கும்.
அதனால் ஹெர்னியா பாதிப்பு ஏற்படுகிறது. எந்தவித அறிகுறியும் இல்லாமலேயே ஹெர்னியா ஏற்படலாம் என்பதால், இதற்கு காரண காரியங்களை பொதுவாகவே கூற முடியும்.
மலம் கழிப்பதில் சிக்கல்

பெரும்பாலும் வயிற்றுப் பகுதியில் சிறைய அளவுக்கு அதிகமான பிதுக்கம் அல்லது புடைப்பு தெரிவதுதான் ஹெர்னியாவின் அறிகுறி என்று கூறலாம்.
நடக்கும்போது, ஓடும்போது, மாடிப்படி ஏறும்போது இதன் காரணமாக வலி ஏற்படும்.
மூச்சுவிடும்போதும், மலம் கழிக்கும்போதும் பிதுக்கம் பெரியதாக மாறும். சிலருக்கு மலம் கழிப்பதில் சிக்கல்களும் ஏற்படலாம்.
ஆண்மைக் குறைவு

ஹெர்னியாவின் அறிகுறிகள் என்றால் இவற்றைத் தான் பொதுவாக வைத்திய நிபுணர்களால் கூறப்படுகிறது.
ஹெர்னியா என்ற நோய்க்கும் ஆண்மைக் குறைவுக்கும் நேரடியான தொடர்பு கிடையாது.
ஆனால் அதற்காக எடுத்துக் கொள்ளும் சிகிச்சைக்கும் விந்தணு உற்பத்திக்கும் தொடர்பு இருக்கிறது. இந்த குடலிறக்கம், அடிவயிற்று பகுதியில் ஏற்படும் என வைத்தியர்கள் கூறுகின்றனர்.