தடுப்பூசி போடாதவர்களுக்கு ஏற்படும் நிலை-வெளிவந்தது ஆய்வு முடிவு
vaccine
corona
death
By Sumithiran
தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களே அதிகளவில் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்கள் தொடர்பான புள்ளிவிபரங்களை கடந்த மூன்று வாரங்களாக நாங்கள் ஆராய்ந்தோம், இதன்போது உயிரிழந்தவர்களில் பலருக்கு தடுப்பூசி போடப்படவில்லை என்பதை நாம் கண்டறிந்தோம். தங்களிற்கு விருப்பமான தடுப்பூசிகளுக்கு காத்திராமல் 60வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசியை செலுத்திக்கொள்வது அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.
30வயதிற்கு மேற்பட்டவர்களும் தயக்கமின்றி தடுப்பூசியை செலுத்திக்கொள்ளவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாடு இன்னமும் மூன்றாம் அலையையே எதிர்கொண்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி