‘ராணி சிறி லங்கி’ யார்…! பொதுமக்களின் உதவியை நாடும் வெளிநாட்டு விவகார அமைச்சு

Sri Lanka Sri Lankan Peoples Lebanon Foreign Employment Bureau Ministry of Foreign Affairs - sri lanka
By Jaso Oct 15, 2026 07:13 PM GMT
Report

லெபனானில் 42 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்த நிலையில் உயிரிழந்த, இலங்கையர் என்று நம்பப்படும் ஒரு பெண்ணின் அடையாளம் குறித்துத் தகவல்களை வழங்குமாறு வெளிநாட்டு விவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அந்தப் பெண் “ராணி சிறி லங்கி” (Rani Sri Lanki) என்ற பெயரில் அறியப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தகவல் தெரிந்தவர்கள் வழங்க கோரிக்கை

  குறித்த பெண்ணின் அடையாளத்தை உறுதிப்படுத்தவோ அல்லது அவரது குடும்பத்தினர் மற்றும் தெரிந்த நபர்களைக் கண்டறியவோ உதவக்கூடிய தகவல்கள் தெரிந்தவர்கள், முன்வந்து தகவல்களை வழங்குமாறு அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

‘ராணி சிறி லங்கி’ யார்…! பொதுமக்களின் உதவியை நாடும் வெளிநாட்டு விவகார அமைச்சு | Who Is Rani Sri Lanki Foreign Ministry Public Help

தகவல்களை, பத்தரமுல்லையில் உள்ள ‘சுஹுருபாய’ (Suhurupaya) கட்டிடத்தின் 16-வது மாடியில் அமைந்துள்ள அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவிடம் (Consular Affairs Division) வழங்கலாம்.

பிக்குகளின் போராட்டத்தால் முடங்கிய காலி வீதி போக்குவரத்திற்காக சற்றுமுன்னர் திறப்பு

பிக்குகளின் போராட்டத்தால் முடங்கிய காலி வீதி போக்குவரத்திற்காக சற்றுமுன்னர் திறப்பு

தொடர்பு கொள்ள வசதி

மேலும், அமைச்சின் அவசர அழைப்பு இலக்கமான +94 11 227 5525 என்ற எண்ணின் ஊடாகவோ அல்லது consular@mfa.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ தொடர்புகொள்ள முடியும்.

‘ராணி சிறி லங்கி’ யார்…! பொதுமக்களின் உதவியை நாடும் வெளிநாட்டு விவகார அமைச்சு | Who Is Rani Sri Lanki Foreign Ministry Public Help

இந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளிலிருந்து 14 நாட்களுக்குள் தகவல்களை வழங்குமாறு அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், பெறப்படும் அனைத்துத் தகவல்களும் மிகவும் இரகசியமாகப் பாதுகாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னாரில் வீதிகளில் ஆபத்தான முறையிலான செயற்பாடு: பாயவுள்ள சட்ட நடவடிக்கை!

மன்னாரில் வீதிகளில் ஆபத்தான முறையிலான செயற்பாடு: பாயவுள்ள சட்ட நடவடிக்கை!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026