ரஷ்யாவின் அடுத்த குறி யார் : பீதியில் அண்டை நாடுகள்
உக்ரைனிய போரின் இறுதியில் ரஷ்யா வெற்றி பெற்றுவிட்டால், ரஷ்ய அதிபர் விளாடிமீர்புடினின் அடுத்த குறி தாங்களாக இருக்கலாம் என்ற அச்சம் லிதுவேனியர்களிடையே ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
உக்ரைனிய சர்வதேச படைப்பிரிவில் தன்னார்வ துப்பாக்கி சுடும் வீரரான லிதுவேனியாவைச் சேர்ந்த மிண்டாகாஸ் லியுடுவின்காஸ், உக்ரைன் போரில் பங்கேற்பதற்கு தமக்கு வேறு காரணங்கள் உள்ளதாக கூறுகிறார்.
ரஷ்யாவுக்கு எதிராக சண்டை
தம்மை ஒரு பெருமை மிக்க தேசபக்தராக கூறிக்கொள்ளும் அவர், உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு எதிராக சண்டையிடுவதன் மூலம், தனது சொந்த நாட்டைப் பாதுகாப்பதாக மிண்டாகாஸ் நம்புகிறார்.
“நாங்கள் ரஷ்யாவை உக்ரைனில் தடுத்தி நிறுத்தியே ஆக வேண்டும்” என்று ஆக்ரோஷமாக கூறியபடி, அடுத்த தாக்குதலுக்கான பயணத்துக்கு ஆயத்தமானார் மிண்டாகாஸ்.
மேற்கத்திய நாடுகளின் இராணுவ கூட்டமைப்பான நேட்டோவில் ஒரு பகுதியாக இருக்கும் ரஷ்யாவின் அண்டை நாடுகளில் லிதுவேனியாவும் ஒன்றாகும்.
ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு தொடர்பான திட்டங்கள் குறித்தும், மேற்கத்திய நாடுகளை பலவீனம் மற்றும் ஸ்திரமற்றதாகவும் ஆக்கும் புடினின் நோக்கம் பற்றியும் பல்வேறு நாடுகள் நீண்ட காலமாக உரத்த குரலில் எச்சரித்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.