உக்ரைன் மோதல் - புடினை வழிநடத்தும் அந்த மர்ம மனிதன் யார்?
விளாடிமிர் புடின் ஒரு தனி மனிதராக நின்று ரஷ்ய இராணுவத்தை மிக ஆபத்தான போர்ச் சூழலுக்கு இட்டுச் செல்கிறார், இது அவரது நாட்டின் பொருளாதாரத்தையே சீரழிக்கும் அச்சுறுத்தலாக முன் நிற்கிறது.
அவர், அண்மையில் நடந்த இரண்டு ஆலோசனைக் கூட்டத்தில் தனக்கு மிகவும் நெருக்கமான ஆலோசகர்களிடமிருந்தும் இடைவெளி விட்டே அமர்ந்திருந்த காட்சிகள் வெளியாயின.
படைகளின் தலைமைத் தளபதியாக, படையெடுப்புக்கான இறுதிப் பொறுப்பு அவரிடமே உள்ளது. ஆனால் அவர் எப்போதும் ஆழ்ந்த விசுவாசமுள்ள நபர்களையே நம்பியிருந்தார், அவர்களில் பலர் ரஷ்யாவின் பாதுகாப்பு சேவைகளில் தங்கள் வாழ்க்கையைத் தொடங்கியுள்ளனர்.
அவர் அதிபராக இருக்கும் இந்த மிக மோசமான தருணத்தில் அவர் யாருடைய ஆலோசனைக்குக் காது கொடுக்கிறார் என்ற கேள்வி எழுகிறது. அப்படி ஒருவருக்கு அவர் செவிமடுப்பதாக இருந்தால், அவர், புடினின் நீண்ட நாள் நம்பிக்கைக்குரியவரும் உக்ரைனிலிருந்து இராணுவப் படைப்பிரிவுகளை கலைக்கவும் மேற்கு நாடுகளின் இராணுவ அச்சுறுத்தலிலிருந்து ரஷ்யாவைக் காக்கவும் புடினை வழிமொழிபவர்களில் ஒருவரான ஷெர்கே ஷோய்க் ஆகவே இருக்கக் கூடும்.
அதிபருடன் வேட்டையாடவும் மீன் பிடிக்கவும் அடிக்கடி சைபீரியா சென்று வருபவர் இவர். புடினின் வாரிசாகவும் இவரே கடந்த காலங்களில் கருதப்பட்டார்.
ஆனால், இந்த மேசையின் இன்னொரு கோடியில், ஆயுதப் படைகளின் தலைவருக்கு அருகில் சாதாரணமாக அமர்ந்திருக்கும் அவரது இந்த அசாதாரண புகைப்படத்தைப் பார்த்தால், இவரது குரல் எந்த அளவுக்கு புடினின் காதுகளைச் சென்றடையும் என்ற சந்தேகம் எழுகிறது.
"கீவ் மீதான தாக்குதலில் படைகளுடன் அணிவகுத்துச் சென்று ஒரு பாதுகாப்பு அமைச்சராக, இந்தப் போரை வென்றெடுத்திருக்க வேண்டியவர் ஷோய்கு" என்று ஆயுத மோதல் விவகாரங்களில் நிபுணரான வேரா மிரோனோஃபா தெரிவித்துள்ளார்.
