ரம்புக்கனையில் கொல்லப்பட்டவர் யார்? வெளியானது தகவல்
killed
shooting
rambukkana
By Sumithiran
ரம்புக்கனையில் இன்றையதினம் காவல்துறையினரின் துப்பாக்கிசூட்டில் கொல்லப்பட்டவர் ஐக்கிய தேசிய கட்சியின் இளைஞர் அணியின் முன்னாள் உறுப்பினர் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதை கண்டித்துள்ள ஐக்கியதேசிய கட்சி, ஆர்ப்பாட்டக்காரர்கள், அத்தியாவசியப்பொருட்கள் தங்களுக்கு கிடைக்கவேண்டும் என்றே வேண்டுகோள் விடுத்தார்கள் உயிராபத்தை ஏற்படுத்தக்கூடிய பலத்தை பிரயோகிக்கவேண்டிய அவசியமில்லை என குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை கொல்லப்பட்டவரின் குடும்பத்தாரையும் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களையும் பார்ப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜயவர்த்தன சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு செல்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4ம் ஆண்டு நினைவஞ்சலி