உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகள் யார் …! கண்டுபிடித்தார் சரத்வீரசேகர
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சஹ்ரான் மற்றும் நௌபர் மௌலவி ஆகியோரே பிரதான சூத்திரதாரிகள். இவர்களில் சஹ்ரான் இறந்துவிட்டார். இவ்வாறு தெரிவித்துள்ளார் முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
எப்.பி.ஐ., இன்டர்போல் ஆகியவற்றுக்குகூட கண்டுபிடிக்கமுடியாமல்போன பிரதான சூத்திரதாரியொருவர் இருந்தால், அவர் பற்றி தகவல் வெளியிடாமல் இருப்பது ஏன்? இது பாதிக்கப்பட்ட கத்தோலிக்க மக்களை அவமதிக்கும் செயல் என்றே நான் கருதுகின்றேன்.
ஷானி அபேசேகரவிற்கு மீண்டும் பதவி
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின்போது ஷானி அபேசேகர சேவையில் இருந்தார். தற்போது அவருக்கு மீண்டும் பதவி வழங்கப்பட்டுள்ளது. எனவே, எப்படியான பிரதான சூத்திரதாரியை கண்டுபிடிக்கின்றார்கள் என பொறுத்திருந்து பார்ப்போம். அவ்வாறு பிரதான சூத்திரதாரியை கண்டுபிடிக்க முடியாமல்போனால், தம்மால் போலியான கருத்தே சமூகமயப்படுத்தப்பட்டது என்பதை மக்கள் முன்னிலையில் அரசாங்கம் தெரிவிக்க வேண்டும்.
பிள்ளையானுக்கு தொடர்பு இல்லை
அதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் பிள்ளையானுக்கு தொடர்பு இல்லை என்றே கூறப்படுகின்றது. சிலவேளை அவருக்கு தெரிந்திருந்தால் அது பற்றி விசாரணை செய்யலாம். முழு அதிகாரமும் தற்போது அரசாங்கம் வசம் உள்ளது. அவ்வாறு விசாரணை செய்து அனைத்து தகவல்களும் மக்கள் மயப்படுத்தப்பட வேண்டும்.” – என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
