ஜம்பர் அணிய காத்திருங்கள்! அமைச்சருக்கு சாமர எச்சரிக்கை
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவை விரைவில் சிறை காற்சட்டை அணிய காத்திருக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க சாடியுள்ளார்.
காவல்துறை திணக்களத்திற்கு புதியவர்களை இணைத்து கொள்வதற்காக போட்டிப் பரீட்சை மற்றும் உடற்தகுதி - நேர்முகப் பரீட்சைகள் முடிவடைந்த நிலையில் அவற்றை இரத்துச் செய்து புதிய வர்த்தமானி மூலம் மீண்டும் இந்த படிமுறையை செய்ய திட்மிட்டுள்ளதை சுட்டிகாட்டியே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
பொலிஸ் திணைக்களம்
“பொலிஸ் திணைக்களத்திற்கு புதியவர்களை இணைத்து கொள்ள 18000 விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டதில் 6000 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டது.
அதில் போட்டிப் பரீட்சையில் 3000 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதற்காக பொலிஸ் திணைக்களம் பாரிய தொகையை செலவழித்துள்ளது.
இந்த நியமனங்கள் நவம்பர் 2024 கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். அதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பயிற்சிக்காக ஆயத்தமாகியுள்ளனர்.
மேலும், சிலர் செய்து கொண்டிருந்த வேலையிலிருந்து விலகியுள்ளனர்.
இதற்கமைய 500 பேரை சேர்த்துக் கொள்வதாக தெரிவித்து 100 பேரை இணைத்து கொள்ளவுள்ளனர்.
இப்போது தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு தொலைபேசியில் மீள விண்ணப்பிக்குமாறு கோருகின்றனர். தயவுசெய்து இவர்களின் எதிர்பார்ப்பு வீணடிக்க வேண்டாம்” என தெரிவித்துள்ளார்.
