நேருக்கு நேர் சந்தித்த ட்ரம்ப் - கமலா ஹாரிஸ்: இறுதியில் நடந்தது இதுதான்..!
அமெரிக்க (US) அதிபர் தேர்தலில் வேட்பாளர்களாக களமிறங்கும் டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) மற்றும் கமலா ஹாரிஸ் (Kamala Harris) இருவர் தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்திய நேரடி விவாதத்தில் கலந்து கொண்டனர்.
குறித்த விவாதமானது, இன்று (11) இந்திய நேரப்படி காலை 6.30 மணியளவில் ஆரம்பமானது.
அதன் போது, இருவரும் பொருளாதாரம், கருக்கலைப்பு, குடியேற்றம் ஆகியவற்றை பற்றி பரஸ்பர விமர்சனங்களை முன்வைத்து விவாதத்தை முன்னெடுத்துள்ளனர்.
விமர்சனங்கள்
அத்தோடு, இஸ்ரேல்- ஹமாஸ், உக்ரைன்- ரஷ்யா போர் குறித்தும் தங்களது நிலைப்பாடுகளை முன்வைத்து தனிப்பட்ட ரீதியிலும் விமர்சனங்களை முன்வைத்து பேசியுள்ளனர்.
கமலா ஹாரிஸை மார்க்சிஸ்ட் என ட்ரம்ப் விமர்சித்ததையடுத்து, ட்ரம்ப் சர்வாதிகாரிகளின் தீவிர நண்பர் என்றும் உலக நாடுகள் அவரை பார்த்து சிரிப்பதாகவும் கமலா ஹாரிஸ் வெளிப்படையாக விமர்சித்துள்ளார்.
ட்ரம்பின் பதிவு
இந்த நிலையில், விவாதம் முடிவடைந்த பிறகு “இதுவரை கலந்து கொண்ட விவாதங்களிலேயே மலா ஹாரிஸ்க்கு எதிரான விவாதம்தான் சிறந்தது” என்று டொனால்ட் ட்ரம்ப் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
எனினும், டொனால்ட் ட்ரம்ப் மற்றும் கமலா ஹாரிஸின் விவாதத்தை நேரலையில் பார்வையிட்ட 600 வாக்காளர்களிகளில் 63 வீதமானோர் கமலா ஹரிஸுக்கு ஆதரவாக கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |