அதிபர் தேர்தலில் களமிறங்குவது ஏன் - டலஸ் விளக்கம்
அதிபர் தேர்தலில் தான் ஏன் போட்டியிடுகின்றேன் என்பது தொடர்பில் டலஸ் அழகப்பெரும டுவிட்டரில் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார்.
வரலாற்றில் முதன்முறையாக ஒருமித்த அரசாங்கமொன்றை உருவாக்குவதற்கும், இதுவரை நிலவிய மோசடியான அரசியல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும் தான் அதிபர் தேர்தலில் களமிறங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
My primary intention in running for presidency is, to form an actual consensual government for the first time in our history, with the inclusion of main opposition and all other opposing parties, to put an end to the deceitful political culture, that clouded our nation for ages. pic.twitter.com/85zcRjQewp
— Dullas Alahapperuma (@DullasOfficial) July 16, 2022
அத்துடன் கட்சி வேறுபாடின்றி மக்கள் வீதிக்கு வந்துள்ளனர். இனியும் தாமதிக்க வேண்டாமென தெரிவித்து 225 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் டலஸ் கடிதமொன்றையும் அனுப்பி வைத்துள்ளார்.
